Skip to main content

துருக்கியில் அதிகரிக்கும் கொரோனா - ஒரே நாளில் 42308 பேருக்கு தொற்று!

Apr 03, 2021 183 views Posted By : YarlSri TV
Image

துருக்கியில் அதிகரிக்கும் கொரோனா - ஒரே நாளில் 42308 பேருக்கு தொற்று! 

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 



கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன.



கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் துருக்கி 8-வது இடத்தில் உள்ளது.



இந்நிலையில், துருக்கியில் ஒரே நாளில் 42,308 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்தைக் கடந்துள்ளது. 



துருக்கியில் கொரோனாவால் ஒரே நாளில் 179 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31,892 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இதுவரை 30.59 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 3.08 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை