Skip to main content

செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டரை பறக்கவிடும் நாசா!

Mar 25, 2021 164 views Posted By : YarlSri TV
Image

செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டரை பறக்கவிடும் நாசா! 

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றி ஆய்வு செய்ய அமெரிக்க வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை ஏவியது.



இந்த ரோவர் விண்கலம் கடந்த மாதம் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது. பின்னர் செவ்வாய் கிரகத்தை படம் பிடித்து நாசாவுக்கு அனுப்பியது. ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபடும்.



பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்துடன் மிகச்சிறிய ரக ஹெலிகாப்டரும் செவ்வாய் கிரகத்தில் தரை இறக்கப்பட்டுள்ளது.



இன்ஜெனூட்டி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அதிநவீன சிறிய ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது.



இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் இன்ஜெனூட்டி ஹெலிகாப்டர் விரைவில் அதாவது ஏப்ரல் 8-ந் தேதிக்குள் பறக்க விடப்படும் என்று நாசாவின் அறிவியல் இயக்குனர் பாபி பிரவுன் தெரிவித்தார். அதன்மூலம் உலகத்துக்கு வெளியே முதல் முறையாக வேறு கிரகத்தில் ஹெலிகாப்டரை நாசா இயக்க உள்ளது.



விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்களின் முதல் விமானத்தின் ஒரு பகுதியை இன்ஜெனூட்டி ஹெலிகாப்டரில் இணைத்து உள்ளனர். ரைட் சகோதரர்களின் சொந்த ஊரான ஓகியோவின் டேட்டாலில் உள்ள வரலாற்று பூங்காவில் இருந்து அவர்களது முதல் விமானத்தின் கீழ் இருந்து சிறிய அளவிலான மெல்லிய துணியை நாசாவின் வேண்டுகோளை ஏற்று நன்கொடை அளிக்கப்பட்டது. அதனை செவ்வாய் கிரகத்தில் பறக்க உள்ள ஹெலிகாப்டரில் பொருத்தி உள்ளனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை