Skip to main content

துபாயில் வசிக்கும் இந்தியர்களில் 10-க்கு 6 பேர் இதயநோயால் உயிரிழப்பு- ஆய்வில் தகவல்

Mar 24, 2021 216 views Posted By : YarlSri TV
Image

துபாயில் வசிக்கும் இந்தியர்களில் 10-க்கு 6 பேர் இதயநோயால் உயிரிழப்பு- ஆய்வில் தகவல் 

துபாயில் பொதுமக்கள் மத்தியில் இதயநோய் குறித்த விழிப்புணர்வை ஏறுபடுத்துவது மற்றும் இதயத்தை பாதுகாப்பது தொடர்பான மருத்துவ கருத்தரங்கு காணொலி காட்சி வழியாக நடந்தது. இந்த கருத்தரங்கை இந்திய துணை தூதர் டாக்டர் அமன்புரி தொடங்கி வைத்தார். பின்னர் அவர், வளர்ந்து வரும் மருத்துவ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒவ்வொருவரும் தங்களது உடல் நலனை பாதுகாப்பதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.



இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய ஷேக் இதய அறகக்ட்டளையின் நிறுவனர் டாக்டர் பிரஜேஸ் மிட்டல் கூறியதாவது:-



தங்களது அறக்கட்டளை இதய பாதிப்பை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. துபாய் உள்ளிட்ட அமீரகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு உயிரிழந்த இந்தியர்கள் குறித்த விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில், அபுதாபி பகுதியில் இறந்தவர்களில் 10-க்கு 7 பேர் இதய நோய் காரணமாக இறந்துள்ளனர்.



துபாய் மற்றும் வடக்கு அமீரக பகுதிகளில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில், உயிரிழந்த 10 இந்தியர்களில் 6 பேர் இதய நோய் காரணமாக இறந்துள்ளது தெரிய வந்துள்ளது.



குறிப்பாக இந்த பாதிப்பு இளைஞர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. அபுதாபியில் இந்த ஆண்டு இதய பாதிப்பு காரணமாக இறந்த 131 பேரில் 57 பேர் 20 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.



இந்த பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்களிடம் அதிகமாக இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் வேலையிடத்தில் உள்ள பிரச்சனைகள், வாழ்க்கை முறையில் மாற்றம், உணவு பழக்க வழக்கம் உள்ளிட்டவை ஆகும்.



உடல் எடை குறைப்பு, உடற்பயிற்சி, உணவு பழக்கங்களை மாற்றிக்கொள்வது உள்ளிட்டவற்றின் மூலம் இதுபோன்ற பாதிப்புகளை தடுக்க முடியும். அதனைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் மருத்துவ வல்லுநர்களும், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை