Skip to main content

ஜெர்மனியில் ஏப்ரல் 18-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

Mar 24, 2021 174 views Posted By : YarlSri TV
Image

ஜெர்மனியில் ஏப்ரல் 18-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு! 

கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. அங்கு இதுவரை 26 லட்சத்து 78 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக அங்கு வைரஸ் தொற்று ஜெட் வேகத்தில் பரவிவருகிறது. மேலும் அங்கு கொரோனா வைரசின் 3-வது அலை ஏற்படும் அபாயம் நிலவுகிறது.



இதனிடையே வரவிருக்கும் ஈஸ்டர் விடுமுறை நாட்களில் வைரஸ் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அந்த நாட்டின் தேசிய நோய் தடுப்பு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதனைத் தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து மாகாண ஆளுனர்களுடன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் ஆலோசனை நடத்தினார். இதில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.



அதன்படி அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் அறிவித்தார். மேலும் ஈஸ்டர் விடுமுறை நாட்களான ஏப்ரல் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை 5 நாட்களுக்கு நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அவர் அறிவித்தார்.



5 நாட்களும் மக்கள் பொது இடங்களில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி மையங்கள் திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது. தேவாலயங்கள் ஈஸ்டர் நிகழ்ச்சிகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை