Skip to main content

டெல்லி எல்லைகளில் வலுக்கும் விவசாயிகளின் போராட்டம் : ஆணித் தடுப்புகளை அமைத்த பொலிஸார்!

Feb 02, 2021 205 views Posted By : YarlSri TV
Image

டெல்லி எல்லைகளில் வலுக்கும் விவசாயிகளின் போராட்டம் : ஆணித் தடுப்புகளை அமைத்த பொலிஸார்! 

இந்தியாவில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி அந் நாட்டு விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



குறிப்பாக கடந்த 26 ஆம் திகதி குடியரசு தினம் அன்று டெல்லிக்குள் விவசாயிகள் நடத்திய ட்ரக்டர் பேரணியில் வன்முறை சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.



இந் நிலையில் தற்போது டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் நகருக்குள் அத்துமீறி நுழைவதை தடுக்க இரும்பு ஆணித்  தடுப்புகளையும் கொன்கிரீட் தடுப்புகளையும்  பொலிஸார் அமைத்துள்ளனர்.



குறிப்பாக திக்ரியில், போராட்ட களத்திலிருந்து டெல்லி நோக்கி செல்லும் வீதிகளில் முதலில் இரண்டு அடுக்கு இரும்பு தடுப்புகளும் அதைத் தொடர்ந்து இரண்டு கொன்கிரீட் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.



கொன்கிரீட் தடுப்புகளுக்கு இடையே  சீமென்து கலவை போடப்பட்டு விவசாயிகள் நகருக்குள் நுழைவது தடுக்கப்பட்டுள்ளது.



டெல்லி மக்களுக்கு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை