Skip to main content

வரவு செலவு திட்டம் : தமிழகத்திற்கு 1.03 இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு!

Feb 01, 2021 148 views Posted By : YarlSri TV
Image

வரவு செலவு திட்டம் : தமிழகத்திற்கு 1.03 இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு! 

தமிழகத்தில் சாலைப் பணிகளை மேற்கொள்ள 1.03 இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யபடவுள்ளதாக  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.



மத்திய வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்து உரையாற்றி வரும் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், நாடு முழுவதும் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.



மேலும் 11 ஆயிரம் 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும். 1.03 இலட்சம் கோடியில் தமிழகத்தில் 35 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.



தமிழகம் மற்றும் கேரளத்தை இணைக்கும் வகையில் சாலை வசதிகளை ஏற்படுத்த மத்திய வரவு செலவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து கேரள மாநிலம் கொல்லம் வரை நவீன வசதிகளுடன் நெடுஞ்சாலை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.



மேலும் பல விமான நிலையங்களிலும் பராமரிப்புப் பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை