Skip to main content

கிளிநொச்சி- அறிவியல்நகர் காட்டுப்பகுதியில் ரி 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் மீட்பு!

Dec 21, 2020 200 views Posted By : YarlSri TV
Image

கிளிநொச்சி- அறிவியல்நகர் காட்டுப்பகுதியில் ரி 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் மீட்பு! 

கிளிநொச்சி- அறிவியல்நகர் காட்டுப்பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையிலான ரி 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.



குறித்த பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் பெய்த மழையின்போது அவை வெளியே வந்துள்ளது.



அதனைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பில் தகவலறிந்த விசேட அதிரடிப்படையினர் அவற்றை இன்று (திங்கட்கிழமை) மீட்டுள்ளனர்.



இதன்போது ரி56 ரக துப்பாக்கிகள் 5  மற்றும் ரவைகள் 30 மீட்கப்பட்டுள்ளன.  இவை, விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.



மேலும், மீட்கப்பட்ட பொருட்களை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் அறிவுறுத்தலிற்கு அமைவாக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

15 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை