Skip to main content

தமிழகத்தில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளார் குண்டுராவ் விளக்கமளித்துள்ளார்!

Nov 17, 2020 249 views Posted By : YarlSri TV
Image

தமிழகத்தில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளார் குண்டுராவ் விளக்கமளித்துள்ளார்! 

2021 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள தமிழக கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த சூழலில் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் நோக்கில் உள்ள பாஜக ஒருபுறம், அதேபோல் ஏற்கனவே பல தேர்தலில் தொடரும் திமுகவுடனான கூட்டணியை தக்க வைக்க பாடுபடும் காங்கிரஸ் என தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுகவுடனான கூட்டணியில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளை பெறும்? என்ற கேள்வி முன்வந்துள்ளது. எப்போதும் காங்கிரசுக்கு 5 முதல் 10 தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு இதுவே அதிகம் என்பது திமுகவினர் கருத்து. இந்த சூழலில் தொகுதி பங்கீட்டால் கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டு விட கூடாது என்பதில் காங்கிரஸ் தலைமை கவனமாக உள்ளது.



இந்நிலையில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளார் தினேஷ் குண்டுராவ், “2021 சட்டமன்ற தேர்தலில் தொகுதிக்காக திமுகவுடன் பேரம் பேச மாட்டோம். எத்தனை தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட என்பது பற்றி கண்டறியப்பட்டு வருகிறது. தொகுதி பங்கீடுக்காக எதார்த்த அணுகுமுறையின் படி நேர்மையாக, வெளிப்படையாக பேச்சுவார்த்தை நடத்தப்படும். கள எதார்த்ததின் அடிப்படையில் சட்டப்பேரவை தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேசப்படும். பேச்சுவார்த்தை நடத்தி எங்கள் தோழமைகள் சமாதானப்படுத்த முயற்சிப்போம். கடும் போட்டி நிலவும் 100 தொகுதிகளில் திமுகவுக்கு காங்கிரஸ் உதவிகரமாக இருக்கும். வலுவான, நல்ல வேட்பாளர்களை நிறுத்த காங்கிரஸ் ஆலோசனை செய்து வருகிறது. தொகுதி வாரியாக உள்ள எதார்த்தங்களை பார்க்கிறோம். மற்ற விஷயங்களை விட கூட்டணி வெற்றி முக்கியம்” என்று கூறியுள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை