Skip to main content

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை, குளிர்காலத்தை ஒட்டி நேற்று சாத்தப்பட்டது!

Nov 17, 2020 267 views Posted By : YarlSri TV
Image

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை, குளிர்காலத்தை ஒட்டி நேற்று சாத்தப்பட்டது! 

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை, குளிர்காலத்தை ஒட்டி நேற்று சாத்தப்பட்டது. இதையொட்டி காலையில் நடைபெற்ற விழாவில் உத்தரகாண்ட் முதல்-மந்திரி திரிவேந்திர சிங் ராவத், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பங்கேற்றனர். பின்னர் காலை 8.30 மணிக்கு நடை சாத்தப்பட்டது.



கேதார்நாத் கோவிலுக்கு நேற்று முன்தினம் வந்த இரு மாநில முதல்வர்களும், அங்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்றனர். கேதார்புரியில் நடைபெறும் மறுகட்டுமான பணிகளையும் அவர்கள் பார்வையிட்டனர். கேதார்நாத் கோவிலில் சிவபெருமானுக்கான விசேஷ பூஜையை கோவில் தலைமை குருக்கள் நடத்தினார். அதன்பின், சிவபெருமான் சிலை, உற்சவ டோலி எனப்படும் மலர்ப்பல்லக்கில் வைக்கப்பட்டது. அது உக்கிமாத் நகரில் உள்ள ஓம்காரேஷ்வர் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, குளிர்காலத்தில் அங்கு வழிபடப்படும்.



கேதார்நாத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய பனிப்பொழிவு, நேற்று காலை வரை நீடித்தது.



இந்த கோவில் நடை, கடந்த ஏப்ரல் 29-ந் தேதி திறக்கப்பட்டாலும், கடந்த ஜூலை 1 வரை பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு கேதார்நாத் கோவிலுக்கு 1.35 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை