நடிகர் ரஜினிகாந்த்தை அரசியலுக்கு வரக்கோரி திண்டுக்கல்லில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது!
Nov 11, 2020 248 views Posted By : YarlSri TV
நடிகர் ரஜினிகாந்த்தை அரசியலுக்கு வரக்கோரி திண்டுக்கல்லில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது!
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்பது பேசு பொருளாகியுள்ள நிலையில், அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. அண்மையில் அவர் கட்சி தொடங்கவுள்ளதாகவும் நவம்பர் மாதம் அதனை பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்பட்டது.
ஆனால், உடல்நிலை பிரச்னைகள் இருப்பதாகவும் உரிய நேரத்தில் தனது அரசியல் நிலைபாடு குறித்து அறிவிப்பேன் என்றும் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இருந்தாலும், அவரது உடல்நிலை தான் முக்கியம் என ரசிகர்கள் ஆறுதல் அடைந்தனர்.
இத்தகைய சூழலில் தான், ரஜினி ரசிகர்கள் ஆங்காங்கே போஸ்டர்கள் ஓட்டி பரபரப்பை கிளப்பி வருகின்றனர். அந்த வகையில், திண்டுக்கல்லிலும் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அதில், வா தலைவா.. ஓட்டுன்னு போட்ட உங்களுக்கு தான். எங்களின் இறுதி நம்பிக்கை நீங்கள் தான் என குறிப்பிட்டுள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1487 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1487 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1487 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1488 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago