Skip to main content

பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு 100% வரி விலக்கு!

Nov 03, 2020 255 views Posted By : YarlSri TV
Image

பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு 100% வரி விலக்கு! 

பேட்டரி வாகனங்களுக்கு 100% வரி விலக்கு: தமிழக அரசு அரசாணை!



பேட்டரி மூலம் இயங்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 100% வரி விலக்கு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.



காற்று மாசை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க தமிழக அரசு முனைப்பு கட்டி வருகிறது. கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து பேட்டரி வாகனங்களுக்கு 50% வரி விலக்கு வழங்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில் பேட்டரி மூலம் இயங்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 100% வரி விலக்கை அறிவித்துள்ளது  அத்துடன் அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரி சலுகையானது வரும் 2022ஆம் ஆண்டு இறுதி வரை அமலில் இருக்கும் என்பதால் பொதுமக்கள் பேட்டரி வாகனங்களை வாங்கலாம் என்று போக்குவரத்து துறை ஆணையர் கூறியுள்ளார்.



 

Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை