Skip to main content

கமல் ஹாசனுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்!

Nov 07, 2020 303 views Posted By : YarlSri TV
Image

கமல் ஹாசனுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்! 

உலக நாயகன் கமல் ஹாசன் ஐந்து  வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்றுவரை திரையுலகில் உச்ச நட்சத்திரமாக  இருந்து வருகிறார்.  அவர் அரிதாரம் பூசாத வேடங்களே இல்லை..  நடிகர் என்று சின்ன வட்டத்துக்குள் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளாத கமல் இயக்குநர்,  தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர், பாடகர், நடன இயக்குநர்  என பன்முக தன்மை கொண்டவர்.



இதுவரை 3 தேசிய விருதுகளையும், 18 திரைப்பட விழா விருதுகளையும் பெற்றுள்ள கமல்ஹாசனுக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது.



இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “முத்தமிழறிஞர் கலைஞரால் ‘கலைஞானி’ என்று போற்றப்பட்ட – எனது நெஞ்சம் நிறைந்த அன்புக்கு உரிய நண்பர் கமல் ஹாசன் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

நலமுடன் நீண்ட காலம் வாழ்க! #HBDKamalHaasan” என்று பதிவிட்டுள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை