Skip to main content

சம்பா சாகுபடிக்கு நீர்திறக்க கோரி வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

Nov 05, 2020 277 views Posted By : YarlSri TV
Image

சம்பா சாகுபடிக்கு நீர்திறக்க கோரி வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! 

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்க கோரி, வறண்டு கிடக்கும் வயல்களில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில்

ஈடுபட்டனர்.



திருவையாறு அடுத்த மேலத்திருப்பந்துருத்தி பகுதியில் கோனகட்டுங்கல்லாறு மற்றும் குடமுருட்டி ஆற்றின் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர்

நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டதை நம்பி, இப்பகுதி

விவசாயிகள் குருவை பருவத்திற்கு நாற்றுவிட்டனர்.



ஆனால், கோனகட்டுங்கல்லாறு பாசன பகுதியில் தண்ணீர் தேவையான அளவு வராததால் குருவைகைவிடப்பட்டு விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாயினர். இந்நிலையில், தற்போது சம்பா பயிர் செய்ய காத்திருந்த விவசாயிகளுக்கு தேவையான நீர் வழங்கப்படாததால் 700-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் தரிசாக கிடைக்கின்றன.



நாற்றுகள் விட்டு 48 நாட்கள் மேலாகியும், இப்பகுதியில் தண்ணீர் இல்லாததால்

சம்பா நடவு பணிகளை துவங்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், தங்கள் பகுதிக்கு உடனடியாக தண்ணீர் வழங்க வலியுறுத்தி,

வறண்டு கிடந்த வயல்களில் இறங்கி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, முறை பாசனத்தை ரத்து செய்து, பொதுப்பணித் துறையினர்

உடனடியாக இப்பகுதிக்கு சம்பா பயிருக்கு தேவையான தண்ணீரை வழங்க வேண்டும் எனவும், மேட்டூரில் இருந்து 22 ஆயிரம் கனஅடி நீர் திறக்கவும் அவர்கள்கோரிக்கை விடுத்தனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை