Skip to main content

கூலி விவசாயிகளை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து – ஒரு பெண் பலி, 3 பேர் படுகாயம் !

Oct 05, 2020 228 views Posted By : YarlSri TV
Image

கூலி விவசாயிகளை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து – ஒரு பெண் பலி, 3 பேர் படுகாயம் ! 

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே விவசாய வேலைக்கு ஆட்களை ஏற்றிச்சென்ற மினி சரக்கு வாகனம் கவிழ்ந்து ஒரு பெண் பலியானார். 10 பெண்கள், மூன்று சிறுவர்கள் உட்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்



கோபிசெட்டிபாளையம், அருகே உள்ள வெள்ளைப்பாறைமேடு கிராமம். அங்கிருந்து 11 பெண்கள், இரண்டு ஆண்கள் மற்றும் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட விவசாய கூலித் தொழிலாளர்கள்

நம்பியூர் பகுதியில் நிலக்கடலை பறிக்க சென்றுள்ளனர். வெங்கமேடு பகுதியைச்சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான மினி சரக்கு வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.



அவர்களை ஏற்றிச் சென்ற வாகனம், சின்னக்கொரவம்பாளையம் ஓட்டைக்கிணறு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி சாலையோர சுவற்றில் மோதி பக்கவாட்டில் கவிழ்ந்தது.



கூலியாட்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 வாகனம் மூலம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.



இந்த விபத்தில் ஜெயமணி என்ற விவசாயக்கூலி பெண்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பத்து பெண்களில் மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 3 சிறுவர்கள், 10 பெண்கள், 2 ஆண்கள் படுகாயங்களுடன் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



இந்த விபத்து குறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிக்கிய மினி சரக்கு வாகனம் கடந்த ஒரு வார காலத்துக்கு முன்புதான் வாங்கப்பட்டுள்ளது. வாகனத்தை அதிவேகமான இயக்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை