Skip to main content

சிவாஜி கணேசனின் 92வது பிறந்தநாள்; தஞ்சையில் ரசிகர்கள் மரியாதை!

Oct 01, 2020 210 views Posted By : YarlSri TV
Image

சிவாஜி கணேசனின் 92வது பிறந்தநாள்; தஞ்சையில் ரசிகர்கள் மரியாதை! 

நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளையொட்டி, தஞ்சையில் அவரது சிலைக்கு ரசிகர்கள் மரியாதை செலுத்தினர்.



நடிகர் திலகம்’ என திரையுலகம் போற்றும் சிவாஜி கணேசனின் 92ஆவது பிறந்த நாள் இன்று. உலகமே போற்றிய உன்னத கலைஞரான சிவாஜி கணேசன், பிரான்ஸ் நாட்டு செவாலியர் விருது பெற்றவர். இன்றளவும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் என்றே சொல்லலாம். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்துக்கு ரசிகர்கள் மரியாதை செலுத்தி .



அந்த வகையில், சிவாஜி கணேசனின் சொந்த ஊரான தஞ்சை அருகே இருக்கும் சூரக்கோட்டை, ராமநாதன் ரவுண்டானாவில் உள்ள அவரது சிலைக்கு ரசிகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும்



மேற்பட்ட மக்கள் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய ரசிகர்கள், தஞ்சையில் அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை