Skip to main content

இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ் கோனி கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தார்!

Sep 15, 2020 282 views Posted By : YarlSri TV
Image

இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ் கோனி கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தார்! 

இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ் கோனி. 83 வயதான இவர் பெரும் வர்த்தகர். கோடீசுவரரான இவர் அரசியலில் புகுந்து வெற்றி பெற்றார்.



இதன்மூலம் 1994-ம் ஆண்டில் இத்தாலியின் பிரதமரானார். அதைத் தொடர்ந்து 4 முறை அந்நாட்டின் பிரதமராக பெர்லஸ் கோனி செயல்பட்டுள்ளார்.



இவர் தற்போது தேசிய அளவிலான தனது பங்கை குறைத்துக்கொண்டு உள்ளூர் அரசியலில் தனது கட்சியினருக்கு ஆதரவளித்து வருகிறார்.



இதற்கிடையில், பெர்லஸ் கோனிக்கு கடந்த 3-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சர்டினியா தீவுகளுக்கு சமீபத்தில் சுற்றுலா



சென்றிருந்ததாகவும், அங்குதான் தனக்கு கொரோனா பரவியிருக்கலாம் எனவும் பெர்லஸ் தெரிவித்திருந்தார்.



இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெர்லசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 83 வயது நிரம்பிய பெர்லஸ் கொரோனா 



வைரஸ் பாதிப்பால் மிகவும் ஆபத்தான வயது நிலையை கொண்டவர் பட்டியலில் இருந்தார். 



இந்நிலையில், 10 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெர்லஸ் நேற்று கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.



மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ் கோனி ’மிகவும் ஆபத்தான சவாலில் தப்பித்துள்ளேன்’ என தெரிவித்தார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை