ரஷ்யாவில் இன்று 5,504 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!
Sep 11, 2020 329 views Posted By : YarlSri TV
ரஷ்யாவில் இன்று 5,504 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 2,83,61,872 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 9,14,464 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்ய நாட்டிலும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,504 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 10,51,874 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 102 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 18,365 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 5,734 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 8,68,107 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,65,402 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா நான்காவது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் (65,88,448 பேர்), இரண்டாம் இடத்தில் இந்தியாவும் (45,66,726 பேர்), மூன்றாவது இடத்தில் பிரேசிலும் (42,39,763 பேர்) உள்ளன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago