Skip to main content

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் ஐந்து பேருக்கு வழங்கப்பட்டிருந்த தூக்கு தண்டனை ரத்து!

Sep 09, 2020 246 views Posted By : YarlSri TV
Image

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் ஐந்து பேருக்கு வழங்கப்பட்டிருந்த தூக்கு தண்டனை ரத்து! 

ஜமால் கஷோகி சவுதியின் புகழ்பெற்ற பத்திரிகையாளர். அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டிருந்த அவர், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசையும், அதன் மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து கட்டுரை எழுதி வந்தார்.



துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில், ஆவணங்களை பெற கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கி தலைநகர் இஸ்தான்புலில் உள்ள சவுதி தூதரக அலுவலகத்திற்கு சென்றார். அங்கு அவர் மிகக் கொடுரமாக கொலை செய்யப்பட்டு, உடல் அமிலத்தில் கரைக்கப்பட்டது.



இந்த கொலை தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமால் கஷோகியை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், அதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை வெளியிட்டது.



ஜமால் கொலை செய்யப்பட்டதின் பின்னணியில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாகவும் துருக்கி அரசு கூறியது. ஜமால் கொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலும் ஜமாலின் மரணத்தில் சவுதி இளவரசருக்குப் பங்கு இருக்கிறது என்று தெரிவித்திருந்தது.ஆனால் இதனை சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மறுத்துவந்தார். இந்நிலையில் கஷோகி கொலை வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றம் சுமத்தப்பட்ட 5 பேரின் மரணத் தண்டனை ரத்து செய்யப்பட்டு, 20 ஆண்டுக்காலம் சிறைத் தண்டனை வழங்கி சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



மேலும் மூவருக்கு 7 முதல் 10 ஆண்டு கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கஷோகியின் முதல் மனைவியின் மகன் சலா கஷோகி, தன் தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டதாக கூறியதையடுத்து, நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்துள்ளது. இஸ்லாமிய சட்டப்படி, நீதிமன்றம் மரண தண்டணை விதித்திருந்தாலும், குடும்பத்தினர் மன்னிப்பு அளித்துவிட்டதால் மரண தண்டனை ரத்து செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை