Skip to main content

கூட்டமைப்பு நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ரஷியா வந்தடைந்தார்!

Sep 09, 2020 222 views Posted By : YarlSri TV
Image

கூட்டமைப்பு நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ரஷியா வந்தடைந்தார்! 

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் கூட்டம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் இடையேயான கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. 



அதில் இந்தியா தரப்பில் ராஜ்நாத்சிங் பங்கேற்றார். அவர் சீன பாதுகாப்புத்துறை மந்திரியிடம் எல்லை பிரச்சனை தொடர்பாக ஆலோசனையும் நடத்தினார். 



இந்நிலையில், தற்போது இந்த கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையேயான கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய தரப்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று இரவு ரஷிய தலைநகர் மாஸ்கோ வந்தடைந்தார். 



4 நாட்கள் அரசுமுறைப்பயணமாக ரஷியா வந்துள்ள அவரை ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் வரவேற்றனர். ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டத்தில் பங்கேற்றப்பின் நாளை சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி உடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



இரு நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் மட்டத்திலான சந்திப்பின்போது எல்லையில் நிலவி வரும் பதற்றமான சூழல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை