அமெரிக்காவில் 5 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு!
Sep 10, 2020 304 views Posted By : YarlSri TV
அமெரிக்காவில் 5 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு!
வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. அந்தவகையில் அமெரிக்காவில் அதிக அளவிலான கரோனா பாதிப்புகள் பதிவாகி வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவில் கரோனா தொற்றுக்கு 5 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கரோனாவால் மோசமான பாதிப்புகளை சந்தித்து வரும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதனிடையே அமெரிக்க குழந்தைகள் மருத்துவமனை சங்கம் வெளியிட்டுள்ள தகவலில், மொத்த பாதிப்பில் 9.8 சதவிகித குழந்தைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது மொத்த பாதிப்பில் 5,13,415 குழந்தைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் ஒருலட்சம் கரோனா பாதிப்பில் 680 குழந்தைகளுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 3-ஆம் தேதி வரை 70,630 குழந்தைகளுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது 16 சதவிகிதம் அதிகமாகும்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் எண்ணிக்கை 0.7 முதல் 3.7 சதவிகிதமாக உள்ளது. தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில் குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவது குறைவாகவே இருந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்து கண்டறிவதற்காக பரிசோதனை, கண்காணிப்பு, இறப்பு உள்ளிட்டவை வயது வாரியாக கணக்கெடுக்கப்படுகிறது.
அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 63,59,313-ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,90,796-ஆக உயர்ந்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago