Skip to main content

47 ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காணொலி காட்சி மூலம் விருது!

Sep 05, 2020 268 views Posted By : YarlSri TV
Image

47 ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காணொலி காட்சி மூலம் விருது! 

இந்தியா முழுவதும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 47 ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காணொலி காட்சி மூலம் நல்லாசிரியர் விருதுகளை வழங்கி ஆசிரியர்களை கெளரவப்படுத்தினார்.



ஆசிரியர்களைக் கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ம் தேதி டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.



தேசிய நல்லாசிரியர் விருது மத்திய அரசால் வழங்கப்படுகிறது. 2020ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 47 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு, அவர்களின்  பெயர்கள் அறிவிக்கப்பட்டன.



தேசிய நல்லாசிரியர் விருது



இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.



டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற  விழாவில் காணொலி காட்சி மூலம் குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கினார்.



விருது வழங்கப்பட்ட 47 ஆசிரியர்களில் 18 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்ட 47 ஆசிரியர்களில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.



சென்னை அசோக்நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சரஸ்வதி, விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு  மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திலீப் ஆகியோருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.



புதுச்சேரி மாநிலத்தைச்சேர்ந்த முத்துக்குமரன் ராஜகுமாரனுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

3 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை