Skip to main content

வங்காளதேசத்தில் ஒரு மசூதியில் சந்தேகத்திற்குரிய வகையில் எரிவாயுக் குழாய் கசிந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்!

Sep 06, 2020 309 views Posted By : YarlSri TV
Image

வங்காளதேசத்தில் ஒரு மசூதியில் சந்தேகத்திற்குரிய வகையில் எரிவாயுக் குழாய் கசிந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்! 

வங்காளதேசம் டாக்காவுக்கு வெளியில் உள்ள நரயாங்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மசூதியில் வெள்ளியன்று இரவில் ஏற்பட்டுள்ள விபத்துக்கு, எரிவாயுக் குழாயில் ஏற்பட்ட கசிவே காரணம் என தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



விபத்தில் பலத்த தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்டுள்ள 37 பேர் உடனடியாக டாக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த விபத்தில்  வழிபாடு செய்துகொண்டிருந்த மக்களில் ஒரு குழந்தை உள்பட 17 மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

4 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை