அமெரிக்காவில் இதுவரை 4.80 லட்சம் குழந்தைகளுக்கு தொற்று பாதித்திருக்கும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன!
Sep 03, 2020 267 views Posted By : YarlSri TV
அமெரிக்காவில் இதுவரை 4.80 லட்சம் குழந்தைகளுக்கு தொற்று பாதித்திருக்கும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன!
கொரோனா தொற்றுப் பரவலில் உச்சத்தில் இருக்கும் அமெரிக்காவில் இதுவரை 4.80 லட்சம் குழந்தைகளுக்கு தொற்று பாதித்திருக்கும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க குழந்தைகள் நல மருத்துவக் கல்வி மையம் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனைச் சங்கம் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களில் 9.5 சதவீதம் பேர் குழந்தைகள் என்றும், அந்த வகையில் இதுவரை 4,75,439 குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 1 லட்சம் குழந்தைகளில், 631 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 13-27ம் தேதிக்குள் மட்டும் சுமார் 70 ஆயிரம் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் 17% கொரோனா தொற்று உயர்ந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா பாதித்த குழந்தைகளில் 0.6 முதல் 4.1 சதவீத குழந்தைகள்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன, அதில் 0 முதல் 0.3 சதவீதக் குழந்தைகள்தான் மரணத்தை தழுவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கொரோனா தொற்று குழந்தைகளுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று தெரிய வந்திருப்பதாகவும், இது குறித்து விரிவான புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
நேற்று நிலவரப்படி அமெரிக்காவில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 60.73 லட்சத்தை எட்டிவிட்டது. இதில் 1.84 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago