Skip to main content

அமெரிக்காவில் உள்ள ஹிந்து மக்களின் ஓட்டுக்களை பெறுவதற்கு பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம்!

Sep 03, 2020 245 views Posted By : YarlSri TV
Image

அமெரிக்காவில் உள்ள ஹிந்து மக்களின் ஓட்டுக்களை பெறுவதற்கு பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம்! 

அமெரிக்காவில் உள்ள ஹிந்து மக்களின் ஓட்டுகளைப் பெறுவதற்காக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் ஆதரவாளர்கள், "பிடனுக்கான ஹிந்து அமெரிக்கர்கள்" என்ற பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். அமெரிக்காவில் நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்டு மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் போட்டியிடுகிறார். துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.



தற்போது அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. அமெரிக்காவில் 20 லட்சத்திற்கும் மேலான ஹிந்து மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் ஓட்டுகளை பெறுவதற்கு இரண்டு கட்சிகளும் போட்டி போட்டு கொண்டு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.



கடந்த மாதம் 14ஆம் தேதி அதிபர் "டிரம்புக்கு ஆதரவாக ஹிந்து குரல்கள்" என்கிற பிரச்சாரத்தை தொடங்கப்பட்டது. இதற்கு பதிலடி அளிக்கும் விதமாக ஜோ பிடன் ஆதரவாளர்கள் "பிடனுக்கான ஹிந்து அமெரிக்கர்கள்" என்கிற பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.



இந்தக் முதல் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் பிரச்சார வரலாற்றில் ஹிந்துக்களுக்காக தனி பிரச்சாரம் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் ஹிந்துக்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது என்பது தான் காரணம்.



 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை