Skip to main content

நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!

Aug 29, 2020 235 views Posted By : YarlSri TV
Image

நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்! 

நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ரத்து செய்யக் கோரி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. டெல்லி சாஸ்திரி பவன் முன்பு கூடிய கட்சி தொண்டர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.



குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மாணவர் அமைப்பினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.



இதே போல தமிழகத்தில் சென்னை, திருச்செங்கோடு, திருநின்றவூர், சிதம்பரம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல பகுதிகளில் போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாணவர் சமுதாயத்தை காப்பாற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி வலியுறுத்தியுள்ளார்.



நீட் விவகாரம் உச்சநீதிமன்றம் வரை கைமீறி சென்றுவிட்டதால் தமிழக அரசால் எதுவும் செய்ய இயலாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நீட், ஜேஇஇ தேர்வெழுதும் மாணவர்களுக்காக தமிழகத்தில் சிறப்பு பேருந்துகளை இயக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

23 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை