Skip to main content

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,95,053-ஆக உயா்ந்துள்ளது!

Aug 29, 2020 268 views Posted By : YarlSri TV
Image

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,95,053-ஆக உயா்ந்துள்ளது! 

 கரோனா நோய்த்தொற்றால் பாகிஸ்தானில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,95,053-ஆக உயா்ந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:கடந்த 24 மணி நேரத்தில் 415 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.



இதையடுத்து, நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,95,053-ஆக உயா்ந்துள்ளது. இதுதவிர, அந்த நோய்க்கு மேலும் 9 போ் பலியாகினா். இதனைத் தொடா்ந்து, கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,283-ஆக அதிகரித்துள்ளது.இதுவரை அந்த நோயால் பாதிக்கப்பட்ட 2,79,937 போ் குணமடைந்துள்ளனா். 8,833 போ் தொடா்ந்து சிகிச்சி பெற்று வருகின்றனா்.



மருத்துவமனைகளில் கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் 644 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை