Skip to main content

கொரோனோ தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.70 கோடியாக உயர்வு!

Aug 28, 2020 236 views Posted By : YarlSri TV
Image

கொரோனோ தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.70 கோடியாக உயர்வு! 

சீனாவில் ஹூபேய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.



இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 70 லட்சத்து 75 ஆயிரத்து 707 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 2 கோடியே 46 லட்சத்து 05 ஆயிரத்து 227 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 லட்சத்து 34 ஆயிரத்து 771 பேர் உயிரிழந்துள்ளனர்.



வைரஸ் பரவியவர்களில் 66 லட்சத்து 94 ஆயிரத்து 749 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 531 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-



அமெரிக்கா       -  பாதிப்பு - 60,46,060, உயிரிழப்பு - 1,84,777, குணமடைந்தோர் - 33,46,614



பிரேசில்       -    பாதிப்பு - 37,64,493, உயிரிழப்பு - 1,18,726, குணமடைந்தோர் - 29,47,250



இந்தியா       -    பாதிப்பு - 33,84,575, உயிரிழப்பு -  61,694, குணமடைந்தோர்  - 25,83,063



ரஷியா        -    பாதிப்பு -  9,75,576, உயிரிழப்பு -  16,804, குணமடைந்தோர்  -  7,92,561



தென் ஆப்பிரிக்கா - பாதிப்பு -  6,18,286, உயிரிழப்பு -  13,628, குணமடைந்தோர்  -  5,31,338


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை