Skip to main content

நாடு முழுவதும் முற்றுப்பெறாமல் நிலுவையில் உள்ள 101 வீட்டு வசதித் திட்டங்களுக்கு ரூ.10,300 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது!

Aug 22, 2020 284 views Posted By : YarlSri TV
Image

நாடு முழுவதும் முற்றுப்பெறாமல் நிலுவையில் உள்ள 101 வீட்டு வசதித் திட்டங்களுக்கு ரூ.10,300 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது! 

நாடு முழுவதும் முற்றுப்பெறாமல் நிலுவையில் உள்ள 101 வீட்டு வசதித் திட்டங்களுக்கு ரூ.10,300 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.



இது தொடா்பாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நடுத்தர வருமானம் கொண்டோருக்கான வீட்டு வசதித் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்திட்டத்தின் கீழ் முற்றுப்பெறாமல் நிலுவையில் உள்ள 101 வீட்டு வசதித் திட்டங்களுக்கு கடந்த 20-ஆம் தேதி நிலவரப்படி ரூ.10,300 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.



அதன் மூலமாக 71,559 வீடுகள் கட்டி முடிக்கப்பெறும். மத்திய அரசு வழங்கிய நிதியில் ரூ.3,472 கோடி மதிப்பிலான 22 புதிய வீட்டு வசதித் திட்டங்களுக்கும் இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலமாக 20,380 நபா்கள் பலனடைய உள்ளனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.



நடுத்தர வருமானம் கொண்டோருக்கான வீட்டு வசதித் திட்டத்தின் செயல்பாடு குறித்து நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த வாரம் ஆய்வு செய்திருந்தாா். அப்போது முற்றுப்பெறாமல் நிலுவையில் உள்ள வீட்டு வசதித் திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டுமென்று அவா் வலியுறுத்தியிருந்தாா்.



இந்த வீட்டு வசதித் திட்டத்தின் மூலமாக ரூ.25,000 கோடி வழங்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம், எஸ்பிஐ ஆகியவை இத்திட்டத்துக்கான நிதியை வழங்க ஒப்புக்கொண்டன. நாடு முழுவதும் 4.58 லட்சம் வீடுகள் கட்ட ஆர


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

23 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை