Skip to main content

அரசுப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்க குவிந்த பெற்றோர்கள்!

Aug 18, 2020 286 views Posted By : YarlSri TV
Image

அரசுப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்க குவிந்த பெற்றோர்கள்! 

ஒரு பக்கம் கொரோனா ஊரடங்கால் வறுமை காரணமாக குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற திட்டம் இருந்தாலும், தரமான கல்வி நிர்வாகம் உள்ள பள்ளியில் தான் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று சில குறிப்பிட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியையே பெற்றோர்களும் விரும்புகின்றனர்.



அப்படித்தான் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ராமநாதன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் குவிந்தனர்.



நகராட்சி பள்ளி தொடக்க காலத்தில் 200-க்கும் குறைவாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 1,325 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா.



மாணவர்களின் கற்றல் திறனைப் பரிசோதித்து அவர்களுக்கு ஏற்றார்போல் ஆசிரியர்கள் மூலம் கல்வியைக் கற்பித்து வருகிறார்.



இதன் காரணமாக ஒவ்வொரு மாணவர்களும் திறமை மிக்க மாணவர்களாகத் திகழ்கின்றனர்.



இப்பள்ளியில் கடந்த சில வருடங்களாகவே மாணவர் சேர்க்கை விண்ணப்பம் குவிந்து வந்தது. தற்போது இந்த ஆண்டும் மே மாதம் தொடங்க வேண்டிய மாணவர் சேர்க்கை கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தாமதமாக இன்று தொடங்கியது.



6ம் வகுப்புக்கு 200 மாணவர்களுக்கான இடம் மட்டுமே இருந்த நிலையில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் 6 வகுப்பில் சேர தங்கள் பெற்றோருடன் குவிந்தனர்.



மேலும் இந்த கொரோனா காலகட்டத்தில் பல பேர் வேலையை இழந்து வாழ்வாதாரம் பாதிப்பில் உள்ளதால் தனியார் பள்ளியில் படிக்கும் தங்களது குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் அரசுப் பள்ளியை நாடியுள்ளனர்.



இதேபோல தமிழகம் முழுவதும் உள்ள அரசு, நகராட்சி பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டால் ஏழை, நடுத்தர மாணவர்கள் கல்வி தரத்திற்காக தனியார் பள்ளிகளை நாட வேண்டிய அவசியம் இருக்காது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

9 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை