Skip to main content

இளம் பெண்களை அணுகி வழி கேட்பது போல, தமது தொலைபேசியில் ஆபாச வீடியோவை காட்டும் நபர்!

Aug 13, 2020 308 views Posted By : YarlSri TV
Image

இளம் பெண்களை அணுகி வழி கேட்பது போல, தமது தொலைபேசியில் ஆபாச வீடியோவை காட்டும் நபர்! 

ரொறன்டோவில் இளம் பெண்களை அணுகி வழி கேட்பது போல, தமது தொலைபேசியில் ஆபாச வீடியோவை காட்டும் நபர் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிசார் அறிவித்துள்ளனர்.



இத்தகைய மூன்று சம்பவங்கள் அண்மையில் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜூலை 27ஆம் திகதி பிற்பகல் 2.10 மணியளவில் Dovercourt Road area பகுதியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதே நாள் பிற்பகல் 2.30 மணியளவில் d Sudbury Street area, King Street West பகுதியில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. ஓகஸ்ட் 5ஆம் திகதி Dundas Street West and Bathurst Street area பகுதியில் மூன்றாவது சம்பவம் நடந்துள்ளது.



30 மற்றும் 24 வயதுடைய பெண்கள் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது காரில் வந்த 30 வயதுடைய நபர், வழிகேட்பது போல தமது தொலைபேசியில்இருந்த ஆபாச வீடியோவை காண்பித்துள்ளார்.



இதையடுத்து குறித்த பெண்களால் அவர் விரட்டப்பட்டுள்ளார். மூன்று சம்பவங்களிலும் தொடர்புடையவர் ஒருவராக இருக்கலாம் என்றும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் ரொற்னரோ பொலிசார் அறிவித்துள்ளனர்.



குறித்த நபர் பிறவுண் நிறமுடையவர் என்றும், 30 - 35 வயதுக்குட்பட்டவர் என்றும், 5அடி 5 அங்குல உயரமும்,மெல்லிய உடல்வாகும் கொண்டவர் என்றும், கருமையான தலைமுடியையும், கொண்டவர் என்றும் பொலிசார் அடையாளங்களை வெளியிட்டுள்ளனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

3 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை