Skip to main content

கடைகளில் நெருக்குத்தீனி அடைத்து விற்கப்படும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை

Jun 10, 2020 290 views Posted By : YarlSri TV
Image

கடைகளில் நெருக்குத்தீனி அடைத்து விற்கப்படும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை 

பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து கடந்த 2018ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசாணை பிறப்பித்தது. இந்த தடை உத்தரவு 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, தமிழகத்தில் பிளாஸ்டிக் பேக், வாட்டர் பாக்கெட், பிளாஸ்டிக் டீ கப் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தயார் செய்யவும், பயன்படுத்தவும் தமிழக அரசு தடை விதித்தது.இந்த அரசாணையை எதிர்த்து பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தமிழக அரசின் பிளாஸ்டிக் தடை அரசாணை செல்லும் எனவும், விலக்களிக்கப்பட்ட ப்ளாஸ்டிக் பயன்பாட்டையும் தடை செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது. அதன் அடிப்படையில் பிளாஸ்டிக் தடை குறித்து தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணையில் திருத்தம் கொண்டுவந்துள்ளது. இதன் காரணமாக  நொருக்குத்தீனி அடைத்து விற்பனை செய்யப்படும் சீலிடப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

13 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை