Skip to main content

கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், கவுரவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Jun 09, 2020 321 views Posted By : YarlSri TV
Image

கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், கவுரவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு துறையிலும் சிறந்த சாதனை படைக்கும் நபர்களுக்கு அந்த நாட்டு அரசு பல்வேறு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2015-ம் ஆண்டில் உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனான மைக்கேல் கிளார்க், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ என்ற கவுரவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 39 வயதான மைக்கேல் கிளார்க் 115 டெஸ்ட், 245 ஒருநாள் மற்றும் 34 இருபது ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி இருக்கிறார். இந்த விருதை ஏற்கனவே முன்னாள் கேப்டன்கள் ரிக்கி பாண்டிங், மார்க் டெய்லர், ஸ்டீவ் வாக், ஆலன் பார்டர் உள்பட கிரிக்கெட் பிரபலங்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் பெற்றுள்ளனர். விருது குறித்து மைக்கேல் கிளார்க் கருத்து தெரிவிக்கையில், ‘உண்மையை சொல்லப்போனால் விருது அறிவிப்பை முதலில் நான் நம்பவில்லை. இந்த தேர்வு எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும், கவுரவத்தையும் அளிக்கிறது. கொரோனா பிரச்சினையில் இருந்து விளையாட்டு வெற்றிகரமாக வெளிவரும் என்று நம்புகிறேன்’ என்றார்.

 


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

9 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை