இந்திய ஹாக்கி அணிகள் 70 நாட்களுக்கு பிறகு வெளிப்புற பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ளன.
Jun 04, 2020 273 views Posted By : YarlSri TV
இந்திய ஹாக்கி அணிகள் 70 நாட்களுக்கு பிறகு வெளிப்புற பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக போடபட்ட நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகள் முறையான மற்றும் கட்டமைக்கபட்ட வெளிப்புற பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ளன.இந்திய விளையாட்டு ஆணையம் வழங்கிய நிலையான இயக்க நடைமுறை (எஸ்ஓபி) ஐத் தொடர்ந்து தேசிய அணிகள் வெளிப்புறப் பயிற்சியைத் தொடங்கியதாக ஹாக்கி இந்தியா (எச்ஐ) தெரிவித்துள்ளது.மூத்த ஆண்கள் மற்றும் மூத்த பெண்கள் குழுவினருக்கான விளையாட்டு நடவடிக்கைகள் 2020 ஜூன் 1 திங்கள் அன்று இந்திய விளையாட்டு ஆணையம், பெங்களூரு வளாகத்தில் தொடங்கப்பட்டன. என இந்திய ஹாக்கி அமைப்பு ஒரு அறிக்கையில் கூறி உள்ளது.சாய் பெங்களூர் விளையாட்டு நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்காக அரசாங்கத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் எஸ்ஓபிக்கு ஏற்ப அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் நடைமுறையில் இருப்பதை உறுதி செய்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago