Skip to main content

வீரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் பார்முலா1 கார் பந்தயம் ரத்து செய்யப்படுமா என்பது குறித்து அதன் தலைவர் கருத்து

Jun 04, 2020 336 views Posted By : YarlSri TV
Image

வீரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் பார்முலா1 கார் பந்தயம் ரத்து செய்யப்படுமா என்பது குறித்து அதன் தலைவர் கருத்து  

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் அடுத்த மாதம் (ஜூலை) 5-ந்தேதி ஆஸ்திரியா கிராண்ட்பிரி மூலம் தொடங்குகிறது. வழக்கமாக 22 சுற்றுகளாக நடத்தப்படும். கொரோனாவின் கோரதாண்டவத்தால் ஏற்கனவே 3 மாதங்கள் தாமதம் ஆகி விட்டதால் இந்த சீசனில் 15 முதல் 18 சுற்று பந்தயங்கள் மட்டுமே நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்தில் போட்டியை நடத்துவது என்றும், கொரோனா பரவாமல் தடுக்க உரிய மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் பங்கேற்கும் 10 அணிகளைச் சேர்ந்த வீரர்கள் அல்லது சம்பந்தப்பட்ட அணிகளின் உறுப்பினர் யாருக்காவது போட்டிக்கு முன்பாக நடத்தப்படும் பரிசோதனையில கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதை காரணம் காட்டி பந்தயம் ரத்து செய்யப்படாது என்று பார்முலா1 தலைவர் சேஸ் கேரி தெரிவித்துள்ளார். ஒரு வீரர் பாதிக்கப்பட்டால் மாற்று வீரர் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை