இந்தியா நிறுவனத்தின் ஸ்டிரீட் டிரிபில் சீரிஸ் மிட்-ரேன்ஜ் மாடல் இந்திய வெளியீடு
May 31, 2020 512 views Posted By : YarlSri TV
இந்தியா நிறுவனத்தின் ஸ்டிரீட் டிரிபில் சீரிஸ் மிட்-ரேன்ஜ் மாடல் இந்திய வெளியீடு
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் 2020 டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஸ்டிரீட் டிரிபில் ஆர் மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டதே இல்லை.இதுவரை டிரையம்ப் பேஸ் மாடலான எஸ் வேரியண்ட் மற்றும் டாப் எண்ட் ஆர்எஸ் வேரியண்ட் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்சமயம் இந்த வழக்கத்தை மாற்றி டிரையம்ப் நிறுவனம் புதிய மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் வெளியிட இருக்கிறது.டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் ஆர் மாடலில் 765சிசி, இன்-லைன் மூன்று சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 116 பிஹெச்பி பவர், 77 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதே என்ஜின் ஆர்எஸ் மாடலில் 121 பிஹெச்பி பவர், 79 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.புதிய மோட்டார்சைக்கிளில் ஃபுல் கலர் டிஎஃப்டி ஸ்கிரீன், ஒருபகுதி அனலாக் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் பெரிய அனலாக் ரெவ் கவுண்ட்டர் வழங்கப்படுகிறது. ஆர் மாடலில் பிரெம்போ எம்4.32 நான்கு பிஸ்டன் மோனோபிளாக் கேலிப்பர்கள், 310 எம்எம் முன்புற டிஸ்க்குகள் வழங்கப்பட்டுள்ளன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1488 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago