Skip to main content

ஸ்பெயினில் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்று ; மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே வெடித்தது போராடடம்...!

May 24, 2020 303 views Posted By : YarlSri TV
Image

ஸ்பெயினில் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்று ; மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே வெடித்தது போராடடம்...!  

ஸ்பெயினில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்க செயற்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.



சீனாவின் வுஹான் நகரில் தோற்றம் பெற்ற கொரோனா வைரஸ் தற்போது அங்கு கட்டுப்படுத்தப்பட்டாலும் சர்வதேச ரீதியில் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது.



வல்லரசு நாடுகளே இந்த கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.



குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், பிரேஸில், பிரித்தானியா, ஸ்பெயி்ன் போன்ற நாடுகளில் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்திவருகின்றது.



இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைவடைந்த நிலையில் நாட்டின் முடக்க செயற்பாடுகளை ஸ்பெயின் அரசாங்கம் தளர்த்தியது.



இந்த நிலையில் மெட்ரிட் மற்றும் பார்சிலோனா ஆகிய நகரங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் முடக்க செயற்பாடுகளை ஸ்பெயின் அரசாங்கம் மீண்டும் அமுல்படுத்தியது.



இதனையடுத்து குறித்த நடவடிக்கைக்கு எதிராக ஸ்பெயினில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

14 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை