Skip to main content

கொரோனா காலத்தில் கால்நடை வளப்பவர்கள் தொடர்பில் எழுந்துள்ள சந்தேகம்....!

May 24, 2020 265 views Posted By : YarlSri TV
Image

கொரோனா காலத்தில் கால்நடை வளப்பவர்கள் தொடர்பில் எழுந்துள்ள சந்தேகம்....! 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பல நாடுகள் முடங்கியிருக்கின்றன. சுகாதார ரீதியில் மட்டுமல்ல பொருளாதார ரீதியிலும் சர்வதேச நாடுகள் திணறிக் கொண்டிருக்கின்றன.



இச்சூழலில் சிறுகுறு தொழிலாளர்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை பாரபட்சமின்றி பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதிலிருந்து மீண்டுவருவது எப்படி என்பது தொடர்பில் ஆயிரக்கணக்காக மக்கள் விழி பிதிங்கி நிற்கிறார்கள்.



இக்கொரோனாவின் தாக்கம் ஸ்ரீலங்காவையும் வெகுவாக பாதித்திருக்கிறது. மனிதர்களை மட்டுமல்ல, கால்நடைகளையும் வைரஸ் தாக்கம் அதிகளவில் பாதித்திருக்கிறது.



குறிப்பாக, இன்றைய சூழலை கால்நடை வளர்ப்பாளர்கள் எவ்வாறு கையாள வேண்டும், இதிலிருந்து மீண்டு அடுத்தகட்ட நகர்வுகளை எவ்வாறு கையாளுதல்? போன்ற அதிகளவான கேள்விகள் நம்மிடையே எழுகின்றன.



இவற்றினை நிவர்த்தி செய்வதற்கு, “கால்நடை வளர்ப்பில் கொவிட்-19 ஏற்படுத்திய தாக்கமும் அதனில் இருந்து மீண்டு எழுதல் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இவ்வாறான பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொள்வது” என்பது பற்றிய இணையவழியிலான கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.



எதிர்வரும் செவ்வாய் கிழமை 26.05.2020 காலை 10 மணிக்கு இக்கலந்துரையாடலை Jaffna institute of agriculture ஒழுங்குபடுத்தியிருக்கிறது.



இதில் துறைசார் நிபுணர்களான, வட மாகாண சுகாதார திணைக்களத்தின் கால்நடை உற்பத்திப் பணிப்பாளர் dr.சிவகுருநாதன் வசீகரன், மேலதிக மாகாணப் பணிப்பாளர் dr. கணேசநாதன் ரகுநாதன் ஆகியோர் விளக்கங்களையும் அறிவுரைகளையும் வழங்குகிறார்கள்.



இது தொடர்பான விளக்கங்ளையும், மேலதிக தகவல்களையும் இணைய வழியில் நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

18 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை