Skip to main content

போக்கிரி பட ஒளிப்பதிவாளரை அதிரடியாக கைது செய்த போலீசார்

May 28, 2020 281 views Posted By : YarlSri TV
Image

போக்கிரி பட ஒளிப்பதிவாளரை அதிரடியாக கைது செய்த போலீசார்  

தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சாய் சுதா. இவர் கடந்த 7 வருடங்களாக ஷியாம் கே நாயுடு என்பவரை காதலித்து வந்தார். இவர் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த போக்கிரி, பிசினஸ்மேன் உள்பட பல்வேறு படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். நடிகை சாய் சுதாவிடம் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து நெருங்கி பழகி வந்தாராம் ஷியாம் கே நாயுடு. ஆனால்  வாக்குறுதி கொடுத்தபடி திருமணம் செய்து கொள்ளவில்லையாம். இதையடுத்து ஷியாம் தன்னை ஏமாற்றியதாக கூறி நடிகை சாய் சுதா போலீசில் புகார் அளித்துள்ளார்.இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், ஷியாம் கே நாயுடுவை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒளிப்பதிவாளர் ஷியாம் கே நாயுடு ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் பரபரப்பாகப் பேசப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

19 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை