Skip to main content

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் 96 ஆயிரத்தை தாண்டியது

May 22, 2020 281 views Posted By : YarlSri TV
Image

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் 96 ஆயிரத்தை தாண்டியது 

கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ், உலக நாடுகள் அனைத்தையும் வசப்படுத்தி விட்டது. ஒவ்வொரு நாடும் இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பு உத்திகளை வகுத்து செயல்படுத்தி வந்தாலும்கூட, கொரோனாவின் ஆதிக்கம் குறைந்தபாடில்லை.



சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி முதன்முதலாக இந்த வைரஸ் வெளிப்பட்டது. இந்த 5 மாத காலத்தில் அது 200 நாடுகளில் கால் பதித்து விட்டது.



 



உலக அளவில் வல்லரசு நாடான அமெரிக்காதான் கொரோனா பாதிப்பால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,255- பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 96,354- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  16,20,902 -ஆக உள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து  382,169- ஆக உள்ளது. 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

12 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை