Skip to main content

இந்தியா எங்களுடன் தொடர்ந்து பணியாற்றுகிறது - கனடா

Jan 28, 2024 53 views Posted By : YarlSri TV
Image

இந்தியா எங்களுடன் தொடர்ந்து பணியாற்றுகிறது - கனடா 

கனடாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோடி தாமஸ் கூறுகையில், இந்த விவகாரத்தில் அவர்கள் எங்களுடன் ஒத்துழைக்கவில்லை என்று கூற மாட்டேன். இந்த உறவில் நாங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்று நினைக்கிறேன்" என்றார்.



கனடா நாட்டு குடியுரிமை பெற்ற காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த சில நாட்களுக்கு முன் கனடாவில் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவின் தொடர்பு இருக்கக்கூடும் என்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.



இதையடுத்து இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் ட்ரூடோவின் குற்றச்சாட்டுக்கு 4 மாதங்களுக்குப் பிறகு, கனேடிய உயர் அதிகாரி ஒருவர், இந்த விவகாரத்தில் இந்தியா "ஒத்துழைக்கிறது" என்று முதன்முறையாகக் கூறினார். கனடாவுடன் டெல்லி மற்றும் ஒட்டாவாவுடன் இணைந்து பிரச்சினையை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.



35 ஆண்டுகளுக்கும் மேலாக பொது சேவையில் இருந்து வந்த கனடாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோடி தாமஸ்,  கடந்த வெள்ளியன்று ஓய்வு பெற்றவர். அப்போது கூறிய அவர், "நான் அவர்களை (இந்தியர்கள்) ஒத்துழைக்கவில்லை என்று விவரிக்க மாட்டேன். இந்த உறவில் நாங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்று நினைக்கிறேன்." என்றார். 



"இந்தியாவில் உள்ள என்.எஸ்.ஏ அதிகாரிகளுடன் நான் நடத்திய விவாதங்கள் பலனளிக்கின்றன, மேலும் அவை விஷயங்களை முன்னோக்கி நகர்த்தியதாக நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார்.



இந்தியாவுடனான கனடாவின் மேம்பட்ட உறவு அமெரிக்காவின் குற்றச்சாட்டின் விளைவாக இருந்ததா (இந்திய குடிமகன் நிகில் குப்தா காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்ல சதி செய்ததாகக் கூறப்படுகிறார்) என்று தாமஸிடம் கேட்டகப்பட்டது அப்போது அவர், "இரண்டிற்கும் நிச்சயம் தொடர்ப்பு உள்ளது" என்றார். 



“அவர்கள் வெளிப்படுத்திய தகவல்கள் இந்தியாவுடனான எங்கள் நிலைப்பாட்டையும் எங்கள் வலியுறுத்தலையும் ஆதரித்தன. இதைத் தீர்க்க இந்தியா எங்களுடன் இணைந்து செயல்படுகிறது, குறிப்பாக எனது சகா, இதைத் தீர்க்க மிகவும் நெருக்கமாக உள்ளது, ” என்றார். 



“இந்தோ-பசிபிக் பகுதியில் செயல்படும் எங்களது திறன் இந்தியாவுடன் ஆரோக்கியமான உறவை வைத்திருப்பதில் தங்கியுள்ளது. இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்தில் நாங்கள் அதை நோக்கித் திரும்பிச் செல்கிறோம் என்று நான் நினைக்கிறேன்”என்று தாமஸ் கூறினார்.



அவர் ஜனவரி 2022-ல் பிரதமர் ட்ரூடோவின் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.



கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக  ஆகஸ்ட் மாதம் முதல் தாமஸ் இந்திய என்.எஸ்.ஏ அஜித் தோவலுடன் பல முறை இதுகுறித்து பேசியுள்ளார். டெல்லியில் செப்டம்பர் மாதம் நடந்த ஜி20 மாநாட்டின் போதும் இதுகுறித்து பேசியதாக அவர் கூறினார். 



தாமஸின் கருத்துக்கு இந்திய அரசாங்கத்திடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான பதில் எதுவும் இல்லை.



ஜூன் 2023-ல் கனேடிய குடிமகன் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று கனடா "நம்பகமான குற்றச்சாட்டுகளை தீவிரமாகப் பின்பற்றுகிறது" என்று கடந்த செப்டம்பரில் ட்ரூடோ கூறியதை அடுத்து இராஜதந்திர உறவுகள் பெரும் பின்னடைவை சந்தித்தன.



எனினும் கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது. மேலும் வெளியுறவு அமைச்சகம் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளை "அபத்தமானது மற்றும் தூண்டப்பட்டது" என்று கூறியது.  



 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை