Skip to main content

அண்ணாமலைக்கு கே.பி.முனுசாமி பதிலடி!

Jan 27, 2024 44 views Posted By : YarlSri TV
Image

அண்ணாமலைக்கு கே.பி.முனுசாமி பதிலடி! 


அண்ணாமலைக்கு அரசியல் வரலாறு தெரியவில்லை என்றும், அவரது பிரதமர் மோடி கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அ.தி.மு.க துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.





அ.தி.மு.க துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அண்ணாமலைக்கு அரசியல் வரலாறு தெரியவில்லை என்றும், அவரது பிரதமர் மோடி கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 



இதுதொடர்பாக கே.பி. முனுசாமி பேசுகையில், "அ.தி.மு.க சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை துவக்கி விட்டோம். அ.தி.மு.க தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்யப்படும். அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டவர்கள் பா.ஜ.க-வுக்கு ஆதரவு தெரிவிப்பதால் தொண்டர்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர்.



தமிழ்நாட்டில் பாஜக 39 இடங்களில் வெற்றி பெறும் என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்த பின் மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதை அண்ணாமலை உணர்வார். 



அண்ணாமலைக்கு அரசியல் வரலாறு தெரியவில்லை. 1998 நாடாளுமன்ற தேர்தலின் போது வட மாநிலங்களில் மட்டும் தான் பா.ஜ.க இருந்தது. தென் மாநிலங்களில் அந்த கட்சியே கிடையாது. அக்கட்சியை இங்கே அழைத்து வந்து என்.டி.ஏ கூட்டணியை ஏற்படுத்தியவர் ஜெயலலிதா. அதனால், வரலாறு தெரியாமல் பேசக் கூடாது. அண்ணாமலையின் பேச்சை பிரதமர் மோடி கட்டுப்படுத்த வேண்டும். 



முன்னாள் பிரதமர் வாஜ்பாய்-ஐ வாழ்த்திதான் நரேந்திர மோடி இந்த இடத்திற்கு வந்திருக்க முடியும். ஆனால் அண்ணாமலை, மோடியை உருவாக்கிய வாஜ்பாய் பற்றி பேசுவதில்லை. வாஜ்பாய் மறுக்கப்படுகிறாரா அல்லது மறந்துவிடுகிறார்களா என தெரியவில்லை." என்று அவர் கூறியுள்ளார். 



 



Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை