Skip to main content

தேசிய கொடியினை ஏற்றி வைத்தார் ஆளுநர்!

Jan 26, 2024 37 views Posted By : YarlSri TV
Image

தேசிய கொடியினை ஏற்றி வைத்தார் ஆளுநர்! 

குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை பகுதி அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில், தேசிய கொடியை ஆளுநர் ஏற்றினார்.



சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சாலையில்  உழைப்பாளர் சிலை பகுதி அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில், தேசிய கொடியை ஆளுநர் ஏற்றினார்.



இன்று காலை 8 மணிக்கு தேசிய கொடியை ஆளுநர் ஏற்றினார். தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டது. அப்போது இந்திய விமானப்படை  ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. தொடர்ந்து ஆளுநர், முதல்வர் தலைமைச் செயலர் ஆகியோர் தேசியக்கொடிக்கு  மரியாதை செலுத்தினர்.



குடியரசு நாள் விழாவில், தேசிய கோடியை ஏற்றிவைத்த ஆளுநர், முப்படையினர் , காவல் துறையினர், தேசிய மாணவர் படை, பல்வேறு காவல் பிரிவினர், வனம் மற்றும் தீயணைப்புப் படையினரின் அணுவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.



இதைத்தொடர்ந்து மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது, திருந்திய நெல் சாகுபடிக்கான விருதுகள், மதுவிக்கு தொடர்பான காந்தியடிகள் விருதுகள் உள்ளிட்ட விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.



சேலம் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகனுக்கு, நெல் உற்பத்தி திறனுக்கான விருதும், மதுரையை சேர்ந்த ஆயி பூரணம் அம்மாவிற்கு முதலமைச்சரின் சிறப்பு விருதும் , யாசர் அராஃபத், டேனியல் செல்வ சிங் ஆகியோருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமாருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கத்தை ஊடகவியலாளர் முகமது ஜூபேர் பெற்றார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை