Skip to main content

மீன்களின் விலைகள் வீழ்ச்சி; மக்களுக்கு மகிழ்ச்சி !

Jan 19, 2024 33 views Posted By : YarlSri TV
Image

மீன்களின் விலைகள் வீழ்ச்சி; மக்களுக்கு மகிழ்ச்சி ! 

இலங்கையில் மீன்களின் மொத்த விலைகளில்  வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேலியகொடை மத்திய மீன் வர்த்தகர்கள் சங்கம் அறிவித்துள்ளது .



இதேவேளை மீன் கொள்வனவுக்கான கேள்வி குறைந்துள்ளமையே இதற்கான காரணம் என சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார்.



கடந்த சில வாரங்களாக நாட்டில் மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில், 1 கிலோ தலபத் மீனின் விலை 1500 ரூபாவாகவும், 1 கிலோ கிருல்ல மீன் 600 ரூபாவாகவும், 1 கிலோ அலகொடுவா 900 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டது



இந்நிலையில் தற்போது மீன்களின் மொத்த விலை 50 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது .



அத்துடன் பாரை, தலபத், ஷீலா உள்ளிட்ட பல்வேறு மீன் வகைகளின் விலையும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .



 பேலியகொடை மீன் சந்தையில் ஹரல்லோ மீன் 550 ரூபாவாகவும் சாலை மீன் 300 ரூபாவாகவும் பலயா மீன் 600 ரூபாவாகவும் பரவ் மீன் 800 ரூபாவாகவும் கெலவல்லா மீன் 1,000 ரூபாவாகவும் லின்னா மீன் 500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை