Skip to main content

2000 ரூபாயாக அதிகரித்த கரட் அதிர்ச்சில் மக்கள் !

Jan 16, 2024 39 views Posted By : YarlSri TV
Image

2000 ரூபாயாக அதிகரித்த கரட் அதிர்ச்சில் மக்கள் ! 

இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அனுராதபுரம் பொதுச் சந்தையில் ஒரு கிலோ கரட் 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது .



மரக்கறிகளின் விலை உயர்வால் அனுராதபுரம் பொதுச் சந்தைக்கு வந்த பெருந்தொகையான நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்வதை தவிர்த்துள்ளனர். 



ஏனைய நாட்களில் அநுராதபுரம் பொதுச் சந்தைக்கு அதிகளவான நுகர்வோர்கள் வருகை தந்திருந்த நிலையில் இன்றைய தினங்களில் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்கள் சந்தைக்கு வருவதில் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 



இதேவேளை தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 1500.00 ரூபாவாகவும் சில்லறை விலை 1700.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் சுனில் செனவிரத்ன தெரிவித்தார்.



இந்நிலையில் ஒரு கிலோ போஞ்சியின் மொத்த விலை 1,000  ரூபாவாகவும் சில்லறை விலை 1,400 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



ஒரு கிலோ பச்சை மிளகாயின் மொத்த விலை 1,000 ரூபாவாகவும், சில்லறை விலை 1,300.00 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக அவர்  தெரிவித்தார்.



இந்நிலையில் நேற்று முன்தினம் (14) ஒரு கிலோ கரட் 1000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை