Skip to main content

அதிவேக வீதியில் தீக்கிரையான பேருந்து!

Jan 15, 2024 37 views Posted By : YarlSri TV
Image

அதிவேக வீதியில் தீக்கிரையான பேருந்து! 

தெற்கு அதிவேக வீதியில் தனியார் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்து விபத்து  நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.



 தீப்பரவல்

 அதிவேக வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக அதிவேக வீதி காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். 



பேருந்து தீப்பிடித்து எரியத்தொடங்கியதை அடுத்து, பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேறியதனால், அதிஷ்டவசமாக தீயினால் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அவர்கள்தெரிவித்துள்ளனர்.



மேலதிக விசாரணைகள் ஆரம்பம்  

 தீ விபத்து காரணமாக பேருந்து பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

தீ பற்றியமைக்கான காரணம் இதுவரை சரியாக தெரியவில்லை எனவும், இந்த விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாகவும் காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டுளது.   

 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை