Skip to main content

உக்ரைனுக்கு ஏவுகணைகளை வழங்கிய வடகொரியா : வெள்ளை மாளிகை கண்டனம்!

Jan 05, 2024 34 views Posted By : YarlSri TV
Image

உக்ரைனுக்கு ஏவுகணைகளை வழங்கிய வடகொரியா : வெள்ளை மாளிகை கண்டனம்! 

எதிரான மொஸ்கோவின் போரில் பயன்படுத்துவதற்காக வடகொரியா சமீபத்தில் ரஷ்யாவிற்கு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் லாஞ்சர்களை வழங்கியதாக வெள்ளை மாளிகை குற்றம்சாட்டியுள்ளது.



இதுதொடர்பாக தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் கூறுகையில்,



"ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலுடன் அமெரிக்கா வளர்ச்சியை உறுதியாக எழுப்பும். ரஷ்யாவிற்கு வட கொரியாவின் ஆயுத பரிமாற்றம் குறிப்பிடத்தக்கது.



ஆயுத ஒப்பந்தங்கள்

இந்த ஆயுத ஒப்பந்தங்களுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அமெரிக்கா கூடுதல் தடைகளை விதிக்கும்.



ஈரான் ரஷ்யாவிற்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வழங்கவில்லை, ஆனால் ஈரானிடம் இருந்து ஏவுகணை அமைப்புகளை ரஷ்யா வாங்க விரும்புவதாக வாஷிங்டன் நம்புகிறது.



உக்ரைனுக்கு எதிரான டிரோன்கள் மற்றும் பிற ஆயுதங்களுக்காக மொஸ்கோ ஈரானை பெரிதும் நம்பியுள்ளது" என்றார்.



உயிரிழப்புக்கள்

இந்நிலையில், ரஷ்யா தனது ஆயுத கிடங்கில் பலம் வாய்ந்த கின்சால் ஏவுகணைகள், உக்ரைன் நகரங்கள் மீது குறிவைத்து சரமாரியாக வீசியது.



ரஷ்யா தன்னிடம் உள்ள பலம் வாய்ந்த கின்சால் ஏவுகணைகளை, உக்ரைன் நகரங்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

ஒலியை விட 10 மடங்கு வேகத்துடன் பயணிக்கும் இந்த ஏவுகணைகள், உக்ரைனின் வான்பாதுகாப்பு தளவாடங்களை மீறி கீவ், கார்கீவ் நகரங்களின் மீது பயங்கரமாக வெடித்து சிதறின.



இந்த தாக்குதலில் வானுயர கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்து நொறுங்கின. கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டதாக உக்ரைன் நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளன.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை