Skip to main content

அமெரிக்காவில் பெண் நீதிபதி மீது தாக்குதல்!

Jan 04, 2024 49 views Posted By : YarlSri TV
Image

அமெரிக்காவில் பெண் நீதிபதி மீது தாக்குதல்! 

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் வழக்கு ஒன்றின் தீர்ப்பின் போது பெண் நீதிபதி மீது பிரதிவாதி ஒருவர் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.



 தாக்குதல் சம்பவமானது, நேற்று(03) இடம்பெற்றுள்ளது.



நீதிபதி மேரி கே. ஹோல்தஸ், 30 வயதான டெப்ரா ரெட்டனுக்கு மூன்று குற்றச் செயல்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கும் வேளையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.



கைது நடவடிக்கை



தாக்குதல் காரணமாக மேரி கே ஹோல்தஸ் தனது இருக்கையில் இருந்து விழுந்து காயமடைந்துள்ளதாகவும், நீதிபதியின் உதவிக்கு வந்த நீதிமன்ற மார்ஷல் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



இந்நிலையில், தாக்குதலை நடத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன் கிளார்க் கவுண்டி தடுப்பு மையத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகின்றது. 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை