Skip to main content

ரஷ்ய பயணத்திற்கு பிறகு, உக்ரைன் வெளியுறவு அமைச்சரை அழைத்த ஜெய்சங்கர்..!

Jan 04, 2024 34 views Posted By : YarlSri TV
Image

ரஷ்ய பயணத்திற்கு பிறகு, உக்ரைன் வெளியுறவு அமைச்சரை அழைத்த ஜெய்சங்கர்..! 

நம்முடைய இருதரப்பு ஒத்துழைப்பை வரும் ஆண்டில் முன்னேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. உக்ரைனில் நடந்து வரும் மோதல்கள் பற்றிய கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம்” என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.



“இது  ஒரு பயனுள்ள உரையாடல்” என்று குறிப்பிட்டு ஜெய்சங்கர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,  “நம்முடைய இருதரப்பு ஒத்துழைப்பை வரும் ஆண்டில் முன்னேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. உக்ரைனில் நடந்து வரும் மோதல்கள் பற்றிய கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம்” என்று தெரிவித்துள்ளார்.



ரஷ்யாவில் இருந்து திரும்பிய சில நாட்களுக்குப் பிறகு, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் புதன்கிழமை உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபாவுடன் பேசினார். மேலும், இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேசியதுடன் ரஷ்யா-உக்ரைன் மோதல் குறித்து விவாதித்தார்.



இதை  “ஒரு பயனுள்ள உரையாடல்” என்று குறிப்பிட்டு ஜெய்சங்கர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,  “நம்முடைய இருதரப்பு ஒத்துழைப்பை வரும் ஆண்டில் முன்னேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. உக்ரைனில் நடந்து வரும் மோதல்கள் பற்றிய கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம்” என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.



குலேபா,  “ரஷ்யாவின் சமீபத்திய பயங்கரவாத வான்வழித் தாக்குதல்கள், பொதுமக்களின் துன்பம் மற்றும் அழிவை ஏற்படுத்தியத”  பற்றி தனது இந்தியப் பிரதிநிதியிடம் தெரிவித்ததாகக் கூறினார்.



மே 2023 இல், ஜப்பானில் நடந்த ஏழு நாடுகள் குழு (ஜி7) உச்சிமாநாட்டின் ஒருபுறம், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பிரதமர் நரேந்திர மோடியுடன் தனது பேச்சுவார்த்தையின் போது உக்ரைனின் அமைதி சூத்திரத்தில் சேர இந்தியாவை அழைத்தார்.



உக்ரைன் வெளியுறவு அமைச்சர் குலேபா எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “2024-ல் எனது முதல் அழைப்பு எஸ். ஜெய்சங்கருடன் உக்ரேனிய-இந்திய உறவுகள் குறித்து இருந்தது. ரஷ்யாவின் சமீபத்திய பயங்கரவாதம் மற்றும் வான்வழித் தாக்குதல்கள், பொதுமக்களின் துன்பம் மற்றும் அழிவை ஏற்படுத்தியதைப் பற்றி நான் இந்தியப் பிரதிந்திக்கு தெரிவித்தேன். சமாதான சூத்திரத்தில் மேலும் ஒத்துழைப்பது குறித்து நாங்கள் விவாதித்தோம். இது சம்பந்தமாக, தலைவர்களின் உலகளாவிய அமைதி உச்சி மாநாட்டிற்கான உக்ரைனின் தொலைநோக்குப் பார்வையை நான் எனது இந்தியப் பிரதிந்திக்கு தெரிவித்தேன்.” என்று கூறியுள்ளார்.



ஜெய்சங்கரின் பதிவில் இதைக் குறிப்பிடவில்லை என்றாலும், 2018-ம் ஆண்டிலிருந்து இந்தியா-உக்ரைன் இடையேயான அரசுகளுக்கு இடையிலான முதல் கூட்டத்தை விரைவில் நடத்த ஒப்புக்கொண்டதாக உக்ரைன் கூறுகிறது.  “எங்கள் இருதரப்பு உறவுகளின் இந்த முதன்மை பொறிமுறையின் புத்துணர்ச்சியானது, ஒரு விரிவான முறையில் கூட்டாக முன்னேற அனுமதிக்கும்” என்று குலேபா கூறினார்.



ஜெய்சங்கர் கடந்த மாதம் ரஷ்யாவிற்கு ஐந்து நாள் பயணமாக சென்று திரும்பிய ஒரு வாரத்திற்குள் இந்த உரையாடல் நடந்துள்ளது. இவர்களின் உரையாடலுக்குப் பிறகு, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், உக்ரைன் போன்ற புவிசார்-அரசியல் விவகாரங்களைப் பற்றி விவாதிப்பதில் இந்தியா பொறுப்பான அணுகுமுறையை எடுத்ததற்காகப் பாராட்டினார்.



ஜெய்சங்கர், இந்தியா-ரஷ்யா உறவுகள் மிகவும் நிலையானது, மிகவும் வலுவானது என்றும் உத்தி ஒருங்கிணைப்பு, புவிசார் அரசியல் நலன்கள் மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் அடிப்படையிலானது என்றும் கூறினார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை