Skip to main content

தோனியின் திட்டம் இது தான்..! புதிய வியூகத்தை கையாளும் சிஎஸ்கே!

Jan 01, 2024 25 views Posted By : YarlSri TV
Image

தோனியின் திட்டம் இது தான்..! புதிய வியூகத்தை கையாளும் சிஎஸ்கே! 

சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் இம்பெக்ட் வீரராக விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



2024 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதம் தொடக்கம் மே மாதம் வரை நடைபெறவுள்ளது.



ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி இவ்வருட ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவார் என கூறப்படும் நிலையில் அணியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழும்பியுள்ளது.



அடுத்த தலைவர் யார் 

ஏனெனில் அண்மையில் சிஎஸ்கே நிர்வாகம் ஐபிஎல் 2024 தொடரின்போது தோனி விளையாடுவாரா? இல்லையா? என்பதை அவரே முடிவு செய்வார்.மற்றபடி நாங்கள் கருத்து ஏதும் இந்த விஷயத்தில் சொல்ல மாட்டோம் என தெரிவித்திருந்தது.





கடந்த ஆண்டு நான்ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து தோனி பேசும் போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ரசித்து விளையாடிக் கொண்டிருக்கிறேன்.



ஒருவேளை என்னுடைய உடல் முழுமையாக அதற்கு ஒத்துழைக்காதபட்சத்தில் கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்தாக வேண்டும். ஆனால் இதுகுறித்து யோசிக்க இன்னும் நேரம் இருப்பதாகவே கருதுகிறேன் என்று கூறியிருந்தார்.



ருதுராஜ் 

அந்தவகையில் பார்க்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரராகவும், அந்த அணியுடன் அதிக நாட்கள் பயணித்தவராகவும் ருதுராஜ் காணப்படுகிறார். எனவே, ருதுராஜ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவராக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.



இந்நிலையில், இவ்வருட ஐபிஎல் போட்டிகளில் தோனி இம்பெக்ட் வீரராக விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.





கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போதிலிருந்தே முழங்கால் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த தோனி துடுப்பாட்டம் செய்யும் போது சிரமப்படுவதை அவதானிக்க முடிந்தது.



எனவே இம்பெக்ட் வீரர் விதியை பயன்படுத்தி துடுப்பாட்டம் செய்யாமல் களத்தடுப்பு செய்யலாம் என கூறப்படுகிறது.





கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போது இம்பெக்ட் வீரர் விதி அறிமுகப்படுத்தப்பட்டது.



இம்பெக்ட் வீரர் விதி

இம்பெக்ட் வீரர் விதியின் கீழ் ஒவ்வொரு ஆட்டத்தின் நடுவிலும் ஒரு தந்திர மாற்றீட்டை உருவாக்க ஒரு கிரிக்கெட் அணி மாற்று வீரரை பயன்படுத்தலாம். வீரர்களின் விளையாட்டு திறனைக்கொண்டு இம்பெக்ட் வீரர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.



மேலும் போட்டி தொடங்கும் முன் அல்லது முதல் இன்னிங்ஸ் முடிவின் போது அவர்கள் ஆட்டத்தில் இறங்குகிறார்கள்.



தங்கள் புள்ளிகளை இரட்டிப்பாக்க, அணிகள் இம்பெக்ட் வீரர் விதியைப் பயன்படுத்தி அதிக அளவு ஓட்டங்களை அல்லது விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய வீரரைத் தேர்ந்தெடுக்கிறது.



எதிராளியின் விளையாட்டுத் திட்டத்தைத் தடுக்கும் வகையில் இம்பெக்ட் வீரர் விதியை சில அணிகள் மூலோபாயமாகப் பயன்படுத்துகிறது.





ஒரு போட்டியில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க ஐபிஎல் அணிகள் இம்பெக்ட் வீரர் விதியைப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

10 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை