Skip to main content

புத்தாண்டு முதல் நடைமுறைக்கு வரும் புதிய சட்டங்கள்!

Dec 30, 2023 25 views Posted By : YarlSri TV
Image

புத்தாண்டு முதல் நடைமுறைக்கு வரும் புதிய சட்டங்கள்! 

புத்தாண்டு பிறக்கவிருக்கும் நிலையில் பிரித்தானியாவில் புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



பிரதமர் ரிஷி சுனக்கின் ஆட்சி முடிவுக்கு வரலாம் என கூறப்படும் நிலையில், பிறக்கவிருக்கும் புத்தாண்டு முதல் புதிய சட்டங்களை கொண்டுவர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



ரிஷி சுனக்கின் அரசாங்கம் நடைமுறைக்கு கொண்டுவர இருக்கும் பல புதிய சட்டங்கள் வரவிருக்கும் ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கையை கணிசமாக பாதிக்கும் என்றே கூறப்படுகிறது.



ஊதிய உயர்வு 

பிரதானமாக புகைப்பிடிக்கும் விதிகளில் கணிசமான மாற்றம் கொண்டுவரப்படும் என்றே தெரியவந்துள்ளது. இதனால் மில்லியன் கணக்கான இளைஞர்கள் ஒருபோதும் சட்டப்பூர்வமாக சிகரெட் வாங்க முடியாது என்றே கூறப்படுகிறது.



மேலும், குறைந்தபட்ச ஊதியத்தில் உயர்வு மற்றும் ஊழியர்களுக்கு வாடிக்கையாளர்களால் அளிக்கப்படும் டிப்ஸ் தொகை இனி ஊழியர்களுக்கே என்ற சட்ட திருத்தமும் நடைமுறைக்கு வர இருக்கிறது.



புகைப்பிடிக்கும் வயது வரம்பானது இனி ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும். இந்த விதியானது பிறக்கும் புத்தாண்டு முதல் கொண்டுவரப்படும் என்று ரிஷி சுனக் அரசாங்கம் உறுதி அளித்துள்ளது.



இதனால் 14 வயது நிரம்பிய ஒருவர் இனி ஒருபோதும் சிகரெட் வாங்க அனுமதிக்கப்படமாட்டார்கள். தற்போது 16 வயது நிரம்பிய எவரும் சிகரெட் வாங்கலாம்.



ரிஷி சுனக் அரசாங்கம்

எதிர்வரும் ஏப்ரல் 1 முதல் 21 வயது நிரம்பிய ஊழியர்களுக்கு மணிக்கு 11.44 பவுண்டுகள் ஊதியமாக அளிக்கப்பட வேண்டும். முதன்முறையாக பிரித்தானியாவில் 21 மற்றும் 22 வயதுடையோருக்கு தேசிய அளவிலான ஊதியமளிக்க ரிஷி சுனக் அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.



மேலும், புத்தாண்டு முதல் XL bully நாய்களுக்கு தடை உறுதி என தெரிய வந்துள்ளது. டிசம்பர் 31 முதல் XL bully நாய்களை இனப்பெருக்கம் செய்விப்பது, விற்பனை, விளம்பரம், பரிமாற்றம், பரிசாக அளிப்பது, கைவிடுதல் அல்லது பிரித்தானியா மற்றும் வேல்ஸில் தெருக்களில் விட்டுவிடுவது உள்ளிட்டவை சட்டத்திற்கு எதிரானதாகும்.





மேலும், தொழில்முறை ஊழியர்கள் 29,000 பவுண்டுகள் அல்லது அதற்கு மேலும் ஆண்டு ஊதியமாக ஈட்டினால் மட்டுமே இனி விசா அனுமதி என்ற சட்டமும் புத்தாண்டில் வர உள்ளது.



அதேவேளை, கார் உற்பத்தியாளர்களுக்கான புதிய குறைந்தபட்ச இலக்குகள் 2024ல் நடைமுறைக்கு வரும் என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி விற்கப்படும் வாகனங்களில் 22 சதவிகித பூஜ்ஜிய உமிழ்வு கொண்டவையாக இருக்க வேண்டும்.





2035ல் இந்த எண்ணிக்கை 100 சதவிகிதமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை